Saturday, May 30, 2009

உன்னைவிட....





என் கவிதைகளின் உயிர்மூச்சு நீ....

என் வாழ்கை தோட்டத்தின் காவலாளி நீதான்,,,,

பூக்கள் கூட பொறாமை கொள்ளும் உன் மீது,

ஏனென்றால் அதனை விட உன்னை அதிகம் விரும்புவதால்....


அன்று நீ பார்த்த உன் இருவிழி பார்வை....

இன்றுவரை என்னை உன் மனதில்

ஆயுள்கைதி ஆக்கிவிட்டது


நிலா அழகா? நதி அழகா?

இல்லை நீ அழகா?

கண்களை முடி யோசித்தேன்.....

என் பார்வையில் உன்னைவிட

எதுவுமே அழகாய் தெரியவில்லை,,,,

Wednesday, May 27, 2009

ஞாபக மழை,,,,,,



நீ என் மனதில் கட்டிய காதல்
எனும் தாஜ்மஹால் இன்னும்
அப்படியே தான் உன் நினைவுகளுடன்
இருக்கிறது.....



உன் மௌனத்தின் பாஷையை புரிந்துகொள்ள
பார்கிறேன்...
ஏதும் புரியாமல் தவிக்கிறேன்....



உன் ஒன்றை பார்வை போதும்,,,,
என் காதல் வெண்ணிலா உன்
காலடியில் கிடக்கும் ....



ஆயிரம் கண்கள் கொண்ட
இரவுகூட உறங்கிவிடுகிறது....
ஆனால் நான் மட்டும்...
உன் வருகைக்காக விழித்திருக்கிறேன்...



சீக்கிரம் வந்து உன் ஞாபக மழையை
உன்னிடமே எடுத்து சென்று விடு...

நட்பின் சில வரிகள்....



நட்பின் சில வரிகள்.......

கடல் மண்ணை போனாலும்...
நம் நட்பு ஒரு போதும் மாறாது.....

வாழ்க்கை எனும் தோட்டத்தில்
பூத்து குலுங்கும் மலர்கள்....
நண்பர்கள்,,,,,

சொர்கத்தை சேர தியானம் செய்,,,,
சுவர்க்கம் உன்னை சேர....
உன் நண்பர்களை நேசி.....


Tuesday, May 26, 2009

நட்பு...




சிறுக சிறுக கட்டிய குருவி கூடுபோல நம் நட்பு,,,

அது என்றும் நம் நினைவுகளையே சுமந்து இருக்கும்,,,,,

அதை யாராலும் பிரிக்க முடியாது,,,,

கட்டிய நாம் பிரித்தல்தான் உண்டு,,,,,

அன்பே....


அன்பே நான் தனியாக இருக்கும்....

ஒவ்வொரு வினாடியும்,,,,நீ வரும்

கனவுக்காக ஒவ்வொரு நாள் இரவையும் சுமக்கிறேன்....

உன்னோடு வாழ்வதற்காக மட்டும்....

நட்பு....


மனிதனாய் பிறந்து ஒன்றாய் நட்பில் உருவானோம்.......

மண்ணாய்
போகும்வரை தொடரும் இந்த உறவு ...........

புரிந்துகொள்...அன்பே...


தினமும் நிஜங்களுடன் நிழல்கள்
சண்டை போடுகிறது......

ஏனென்றால் என் நினைவுகளில்தான்
உன்னை உணருகிறேன்...

நீ சூரியனை போல மறைந்ததும்
என் வாழ்வு ஒளி இல்லாமல்
போய்விடுகிறது,,,,

முள் குத்தினால் வலிக்கும் ....
அதுபோல உன் ஞாபகம் என் மனதை
குத்துகிறது .....

எல்லா காதலும் வெற்றி பெறுவதில்லை,,,,
என் காதலும் அதுபோல்
ஆகிவிட வேண்டாம்...

என்னைத்தான் புரிந்துகொள்ளவில்லை,,,
என் காதலையாவது புரிந்துகொள் !!!!

Monday, May 25, 2009

வரம்....

கடவுளிடம் நான் கேட்டேன் ....: கடவுளே நான் என்றும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கே வேண்டும் அதற்க்கு ஓர் வழி சொல்லுங்கள் என்று ... அதற்க்கு கடவுள் சொன்னார் : அட முட்டாளே அன்பே உருவான ... உன் நண்பர்கள் உன்னுடன் இருக்கும் போது நீ ஏன் நிம்மதியே வெளியே தேடி கொண்டு இருக்கிறாய் என்று ....

ஆனந்த கண்ணீர்...








இது உன்னை காணததால் வந்த கண்ணீர் அல்ல.... உன் அன்பை எனக்கு கொடுக்க செய்த கடவுளுக்கு நான் சிந்தும் ஆனந்த கண்ணீர்.......

நட்பின் சின்னம்,,,,


இது வேண்டும் என்றால் சாதரண மலராக இருக்கலாம்
ஆனால் ....
நம் நட்பின் அடையாளமும் இதுதான்......

நட்பு...

மலர்ந்த பூவில் வண்டு இல்லை...
திறந்த வனத்தில் கதவுகள் இல்லை...
.வீசும் காற்றுக்கு முடிவில்லை....
நாம் கொண்ட நட்புக்கும் என்றும் பிரிவில்லை.....

நட்பு....


நாம் மீது உண்மையான அன்பும் அக்கரையும் வைத்திருக்கும் ஒருவரை கண்டு பிடிப்பது கடினம்.....
ஆனால்..................
எனக்கு அந்த கவலையே இல்லை......
ஏன் என்றால் நீதான் ஏன் நண்பனாக இருக்கிறாயே.......

நட்பு....


நட்பு என்பது மலரல்ல ....
வடுவதற்குஅது ஆலமரம் போல ...
100 ஆண்டுகள் மேலகியும் வாழ்ந்து கொண்டு இருக்கும் .......



நண்பர்கள்,,,,


அன்பு நிறைந்த உலகில் அப்பா அம்மாவை பார்தேன் ,,,, சந்தோஷம் நிறைந்த உலகில் உடன் பிறந்தவர்களை பார்த்தேன் .,,,, காதல் நிறைந்த உலகில் காதலர்களை பார்த்தேன் ,,, ஆனால் .... நட்பு நிறைந்த உலகத்தில் என் நண்பர்களைதான் பார்த்தேன் ,,

நட்பு...


நட்பு ....
நிறம் பார்த்து வருவதில்லை ......
வசதி பார்த்து வருவதில்லை ...
பணம் பார்த்து வருவதில்லை ,,,,
அது அழகிய மனதை பர்த்து வருகிறது...
அதைஉன்னிடத்தில் கண்டேன் நண்பனே .....
இன்று போல் என்றும் தொடரே வேண்டும் நம் நட்பு ,,,,,,,,,

நட்பு...


எங்கோ பிறந்து ,...
எங்கோ வளர்ந்து ,...
ஒருநாள் ஒருவரை ஒருவர்
இந்த நட்பு கோட்டையில் சந்தித்து கொண்டோம் ....
அப்போது புரியவில்லை நம் உறவு
இன்று வரை தொடரும் என்று ...
நமக்குள் கொஞ்சம் கோபங்கள் ,
சில சண்டைகள் ...
சின்னதாய் ஒரு 'thanks' ....
பெரிசா ஒரு 'sory'...
சிலநேர பிரிவு...
வெகுநேர சந்திப்பு ...
இதுவே நம் உண்மை நட்பின் அர்த்தம் ...
என்றும் பிரியகூடாது நம் நட்பின் அன்பு ....

நட்பு...


திர்பார்த்து வந்த காதல்
என்றும் வாழ்வில் நிலைத்ததில்லை ....
எதிர்பாராமல் வரும் நட்பு
என்றும் வாழ்வில் பிரிந்ததும் இல்லை ......

வாழ்க்கை...



வாழ்கை என்பது ஒரு புத்தகத்தை போன்றது....
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு அனுபவங்கள்.....
பல சந்தோஷங்கள் சில சோகங்கள்...
ஆனால் இன்றைய நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்......

நட்பின் அர்த்தம்,,,



பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனதிற்குதன்
அர்த்தம் அதிகம் ......
அதேபோல்...
நாம் பேசியது மௌனமொழியாக இருந்தாலும்
அதில் கலந்திருக்கும் நம் நட்பின் அன்பு
நமக்கு மட்டும்தான் தெரியும் ....

தோழியாக.....


உன் தாய் உன்னை பத்து மாதம் கருவறையில் சுமந்தாள் ....
நான் உன்னை என் ஆயுள்வரை மனதில் சுமப்பேன்
ஒரு தோழியாக ....

அம்மா....

அம்மா அவள் அருகில் உறங்கும்போது
அன்போடு அனைத்துக் கொள்வாள்.....
சிலநாள் அவள் நமக்கு தோழியாக இருபாள்....
பல நல்ல நமக்கு ஆசானாக இருபாள்....
அவள் என்னை விட்டு பிரிவாள்
என்று எனக்கு என்ன தெரியும் ....

தெரிந்திருந்தால் அவள் அணைபிலிர்ந்து
நான் பிரிந்து இருக்க மாட்டேன்....
ஆனால்
இன்னமும் அவளின் முச்சி காற்றுதன்

என்னை உறங்க வைக்கிறது ......
ஆனால் அவள் உடல் மட்டும்
உயிர் இன்றி போய்விட்டதே.....


நட்பு...

இதயம் வலிக்கும்போது
கண்கள் கலங்கினால் அது ...காதல் ...
கண்கள் கலங்கும்போது இதயம் வலித்தல்
அது .....நட்பு ....

நட்பு...


காதல் என்பது வானவில் போல அழகாக இருக்கும்
ஆனா
ல் நிலையானது அல்ல .......
ஆனால் நட்பு என்பது வானத்தை போல அழகில்லாமல் இருக்கும்
ஆனால் நிலையானது ......
அதுதான் நட்பு ............

நட்பு ...



எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
நமக்குள் இருக்கும் நட்போடு
பேசிகொள்வோம் மௌன மொழியில் .....

நட்பு....


நட்பு என்பது ஆழ் கடலில் இருக்கும் அறிய முத்து ... அந்த முத்தை கடவுள் நமக்கு பரிசாக கொடுத்துள்ளார் .. அதனை கண்டிப்பாக நம் உயிர் உள்ள வரை பாதுகாப்போம்...

நண்பா....


நண்பா,,,,,
உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று நினைத்தேன்....
பின் வேண்டம் என்று விட்டுவிட்டேன்,,,,,,
என் என்றால் உன்னை விடவா என் கவிதை அழகாக இருக்க போகிறது என்று..............

இதயம்...


கடவுளே எங்களை தன் காணமுடியாமல் செய்துவிட்டாய்....
எங்கள் இதயங்களையாவது ஒன்றாக இருக்கவிடு......


அம்மா....


அம்மா ......
நம் உயிருளும் உணர்விலும் இருப்பவள்.
அம்மா........
நமக்கு உருவம் கொடுத்தவள்...
அம்மா...
நமக்கு வலித்தல் அவள் கண் கலங்கும்....
அம்மா...
நம் சிரித்தால் அவள் மனம் மகிழ்வாள்.....
அம்மா.....
அன்பின் மறு உருவம்....
கடவுளின் விலை மதிக்க முடியாத படைப்பு அம்மா.....

நட்பு....


நான் உன்னிடம் பேசியதை விட
நீ எனக்காக பேசியதில்தான்
உணர்தேன் நமக்கான நட்பை......


இதயம்...


என் உயிரை கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்..
நீ என் இதயத்தை அல்லவா கேட்டுவிட்டாய்....
அதை நான் எப்படி தருவது ...
என் இதயமாக இருந்தாலும் ...
அதில் வாழ்வது என் நண்பன் ஆயிற்றே .....

கண்ணீர்....


தினமும் இரவு நட்சத்திரங்களை எண்ணி கொண்டு ....
உறங்காமல் காத்துக்கொண்டு இருக்கிறேன்.....
உன் வருகைக்காக கண்ணிரோடு ......


கண்ணீர்

நட்பின் பிரிவு...


வசந்தத்தின் வானில் சிறகடித்து பறந்தோம்.....
வானவில் போல அழகாக இருந்தோம்.....
விடைபெரும் நேரம் வரவே.....
வேதனையுடன் பிரிந்தோம் .....
அன்று......
பசுமையாக இருந்த நம் மனம்......
இன்று.....
பிரிவு என்ற விதை விழுந்து
இப்படி பட்டமரம் ஆகிவிட்டதே.....

நட்பு...


நாட்கள் மாறினாலும் நம் நட்பு மாறாது..... வானத்துக்கு பூமி எல்லை என்றாள் நம் அன்புக்கு நம் மனம்தான் எல்லை.....
பூத்து குலுங்கும் பூக்களின் அழகை
நம் நட்பு அழகானது.....
அதனால்தான் பூக்களுக்கு நம் மீது கொஞ்சம் பொறாமை......
வானத்தில் மேகக்கூட்டங்கள் இருந்தாலும் அது மறப்பதில்லை....
அதனால்தான் எப்பொழுதும் மழையாக பொழிகிறது.....
அதேபோல்தான் நான் எங்கு இருந்தாலும்....
உன்னை நினைப்பதை மறப்பதில்லை....
உன்னுடன் நட்பில் மயங்கிய என் மனம் மௌனமாகிறது மற்றவர்களின் நட்பை
ஏற்கும்போது......

அன்னை ...

பிறக்கும்போது குழந்தையின் அழுகை அவளுக்கு சங்கீதம்.....
வளரும்போது அவன் உதைப்பது பூபோல் மென்மையாகஇருந்தது....
படித்து அவன் பட்டம் வாங்கியபோது அவள் பரவசம் அடைந்தாள் ....
அவனின் திருமணத்தின்போது ஆனந்த கண்ணீர் விட்டாள்...
ஆனால் அவனோ இன்று அடுக்குமாடி வீட்டில்சொகுசாக வாழ்கிறான்....
ஆனால் அவளோ முதியோர் இல்லத்தில் இவனின் வருகைக்காக காத்துக்கொண்டு இருகிறாள்.....

நட்பு...

இடையில் வந்து இடையிலே
சென்றுவிட
நம் உறவு காதல் அல்ல..... எழேழு யுகங்களையும் தாண்டி
வாழ்ந்து கொண்டு இருக்கும்
நட்பு என்ற உறவு.....

முதல் கவிதை....


உனக்காக முதல் முதலில் எழுதிய கவிதை என்னுடன்தான் உள்ளது.....
ஆனால் நியோ ......
என்னை வேண்டாம் என்றுவிட்டு சென்றுவிட்டாய் அல்லவா.....
இப்பொழுது உன் வருகைக்காக கண்ணீரோடு
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.....

நட்பு...

காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்..
நம் சிந்தும் கண்ணீரை வேடிக்கை பார்ப்பது காதல்....
அந்த கண்ணீர் கீழே சிந்துவதர்ற்குல் தாங்கி பிடிப்பது நட்பு....

நட்பு...

கடல் வேண்டுமானால் வற்றி போகலாம் ...
நான் உன் மீது வைத்த பாசம் ஒரு போதும் மாறாது....
மனிதன் உறவின்றி வாழலாம் ...
ஆனால்.....
நட்பின்றி வாழ்பவன் மனிதனே இல்லை...

இனிய உறவு....




இனிய உறவே....
தூரத்தில் இருந்தாலும் நம் மனங்கள் வேறுபடுவதில்லை,,,
என் மனம் என்றும் உன்னுடனே இருக்கும்..
உன் மனமும் அதேபோல்தான் ..
இது என்றென்றும் மாறாத உறவு...

பள்ளிக்கூடம்...


நம் பள்ளி சுவர்கள் அனைத்தும் நமது கைரேகைகள் பதிந்துள்ளது.....
நாம் படித்த வகுபறைகள், நாம் அமர்ந்த மேஜை நாற்காலி ...
அனைத்தும் நமது பெயர்களையே சொல்லும்.....
நாம் செய்த ஆரவாரங்கள் காற்றில் கலந்து வருகிறது....
நம் பெயர்கள் எங்கும் மறையாமல் நிறைந்திருக்கிறது....
நமக்கு நிழலாக இருந்த மரம் நம் நிழலை படம் எடுத்து காட்டுகிறது....
எதை மறப்பேன் எப்படி மறப்பேன்....
என்னுயிர் நண்பர்களை...