Sunday, May 24, 2009

அம்மா!!!


அம்மா இந்த உலகுக்கு என்னை அறிமுகபடுத்தியவள்...
எனக்கு உயிரை கொடுத்தவள் நீ ....
எனக்கு வலித்தல் உன் கண்கள் கலங்கும்.... உன் வாழ்கையே எனக்காக சமர்ப்பணம் செய்தாய் ....
உன் இறுதி மூச்சி வரை எனக்காகவே வாழ்ந்தாய்....
ஆனால்.....உனக்காக நான் செய்ய நினைத்த கடைமைகளை செய்வதற்குள் என்னை விட்டு சென்றுவிட்டாயே ...
என்னை இவ்வளவு பெரிய பாவியாகி விட்டாயே...
நீ செய்தது நியாயமா?......
எனக்கு பதில் கூறு......
முடிந்தால் உன்னுடனே என்னையும் அழைத்து சென்று விடு..... நீ இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை.........

உறவு....


நம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை..நடப்பதெல்லாம் நினைத்ததும் இல்லை...
இருந்தாலும் நாம் வாழ்கிறோம் எதற்காக?

நம் மீது அன்பும் அக்கறையுடன் இருக்கும் ஓர் உறவுக்காக.... அதுதான் நட்பு எனும் உறவு......

உண்மை நட்பு...



உண்மை நட்பு மறந்து போகாது என்று சொன்னாலும்..

அதன் பிரிவு மிகவும் கொடுமை...

உன் பிரிவை நினைத்து தினமும் ஏங்குகிறேன்...

உன் நினைவுகளை கொண்டுமட்டும் தன் நான் உயிர் வாழ்கிறேன்....

என்றும் மறவாதே என் அன்பை...

இருட்டறை காதல்....




உன் நிழல் போல் தொடருவேன் உன் அன்புக்காக,,,


ஆண்டுகள் பல கடந்தாலும் உன் பார்வை என் மேல் படும் வரை காத்திருப்பேன்,,,

என்னை ஏமாற்றி இருட்டறையில் பூட்டி விடாதே என் காதலை,,,

மாறாத நட்பு....


அம்மா....உனக்கு அன்பு செலுத்த ....
அப்பா.....உனக்கு அறிவை கொடுக்க....
அண்ணா....உன்னிடன் சண்டைபோட....
தங்கை.....உன்னுடன் விளையாட......
இவர்கள் அனைவரும் உன்னோடு ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள்.....
ஆனால்... எந்த சம்பந்தமும் இல்லாமல் உனக்காக எதையும் செய்ய காத்திருக்கும் உறவுதான் நட்பு.....
நல்ல நண்பன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...... அதனால் அந்த உறவையும் உன் நன்பர்களையும்
உயிருள்ளவரை மறவாதே.......

பிரிவு.....

அருகில் இருந்த காலமெல்லாம்..... பிரிவின் கொடுமை தெரியவில்லை.... தூரத்தில் இருக்கும் இடைவெளி இப்போது புரிகின்றது....... விரைவில் உன் முகம் காண ஓடி வந்துவிடுகிறேன்..... அதற்குமுன் நம் நினைவுகளால் வழியும் கண்ணீரோடு எனக்காக காத்திரு......

கசந்த காதல்.....


விடிய விடிய காத்திருந்தேன்,,,,,,, விடியலும் தோன்றவில்லை,,,,,,,,,,
என் காதல் வெண்ணிலா நீயும் வரவில்லை,,,,,,,,,,,,,,,
உன் கள்ள சிரிப்பை வீசிவிட்டு,,,,
என் எல்லா சந்தோசத்தையும் ஒரு நொடியில் அள்ளி சென்று விட்டாய் ,,,,,,,,,,,
உன் வருகைக்காக காத்திருந்து என் உறக்கமும் காணமல் போய் விட்டது ,,,,,,
என் உள்ளமும் கசந்து விட்டது,,,,,,,,,,,,,,,,,,,,,

தூங்காத விழிகள்....


தூங்காத விழிகள்...
உன் அன்புக்காக துடிக்கும் இதயம்....
உன் வரவை எண்ணி தவிக்கும் நான்....
இங்கு ஈர விழிகளுடன் ...
என்னடா உனக்கு புரியவில்லையா நீ பிறந்தது எனக்காக என்று... .....

உனக்காக காத்திருக்கிறேன்...



என்னை கடந்து செல்கிறாய் என்று நினைத்தேன்,,,,, போகும்போது என் இதயத்தையும் அல்லவா களவாடி சென்று விட்டாய்.... இப்போது உன் நினைவால் துடிக்கிறேன்...... உன் வருகைக்காக மனம் ஏங்குகிறேன்.,,,,, என்னை காண வருவாயா கனவிலாவது...

புரியாத காதல்....

நானாக நானிருந்தேன் பின்பு நீயாக எப்படி மாறினேன்???
உன் பார்வையில் நான் மயங்கினேன்.... என்றும் உன் நிழலாக தொடர நினைக்கிறன்...

இரவில் தோன்றும் நட்சத்திரமாக உன்னை எண்ணி தினமும் உன் சிரிப்பை ரசிக்கிறேன்....
கண்கள் மூடினால் என் கனவில் நீ....
கண்களை திறந்தால் என் கற்பனையில் நீதான்...
கண்ணாடியில் பார்க்கும்போது என் உருவம் விழுந்தாலும்....
என் இதயத்தில் உன் உருவம்தான்... நிஜமாக சொல்லிடு என் நினைவில்
நிற்பது நீதானே....
என் நிம்மதியை எப்போது எனக்கு திருப்பி கொடுப்பாய்... என் ஆழ்மனம்
சொல்கிறது என் காதல் உனக்கு புரியும் என்று.....