Wednesday, June 17, 2009

எதற்காக வந்தாய்....



உனக்காக தினம் வாசலில்
காத்திருந்தபோது
நீ வரவில்லை.....

கண்மூடி உறங்கும்போது
கனவில் நீ வரவில்லை.....

உன் நினைவால் நான்
கண்ணீர் சிந்தும்போது நீ வரவில்லை....

உன்னை தேடி
தனிமையில் நடக்கும்போது
நீ வரவில்லை....

இப்போது மட்டும் எதற்காக வந்தாய்
என்னுடைய நிம்மதியை
களவாடி செல்லவா...

Tuesday, June 9, 2009

உன்னைவிட....



அன்பே உன்னை அழைக்கிறேன்....
என் காதலை சொல்ல துடிக்கிறேன்....
என் அன்பு உனக்கு
சுகமா இல்லை சுமையா???
அறியாமல் கேட்கிறேன்
சொல் என் ஜீவனே....

பாதை மாறி பயணம் செயதாலும்....
என் காதல் உன்னையேதான்
சுற்றிகொண்டு இருக்கும்...
உன்னை நினைத்து
வாழும் என் மனதில்
வேறு ஒருவரின்
காதலுக்கு இடமில்லை....

இதயம் நின்றாலும் உன் நினைவு மறந்து போகுமா???
உன் நிழல் போல தொடர்வேன்....
நிமிர்ந்து எப்போது என்னை பார்ப்பாய் ....

காதல் முடிவில்லா இன்பம் என்று இருந்தேன்...
இப்போது அளவில்லாத சோகமாகிவிட்டதே .....