Friday, July 10, 2009

காதலின் கால்தடம்.....

தோழனே உன்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்
ஏனோ தெரியவில்லை இனிகின்றது....
ஆயிரம் சொந்தங்கள் நான் பூமியில் சந்தித்தாலும்
உன்னிடத்தில் ஆயிரம் நெஞ்சங்களை நான் சந்தித்தேன்...
என் நெஞ்சில் நீங்காத உன் உருவத்தை அழிக்க நினைக்கிறன்....
ஆனால்...முடியவில்லை....
உன் உருவம் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது ....
நீ என் வாழ்வில் வரும் முன் நான் தனிமையில்
இருந்தேன்....
இப்போது உன் நினைவில் இருக்கிறேன்,,,,
தொலைதூரம் நீ இருந்தாலும் எப்போதும் எனதருகே....
இருப்பதாய் உணருகிறேன்...
ஏன் என்னுள் இப்படி ஒரு மாற்றம் என்று
அறியாமல் நானிருந்தேன்
பிறகுதான் உனது காதலின் கால்தடங்களை என் மனதில் பார்த்தேன்...
அன்றுமுதல் நானும் உன்னை காதலிக்க
ஆரம்பித்துவிட்டேன்....